முனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்; பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2023 04:06
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 1 ம் தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் மண்டல பூஜையை முன்னிட்டு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. இன்று 12 ம் நாள் ( கால் மண்டலம்) மண்டலாபிஷேகம் நடந்தது. மண்டாலாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக சிறப்பு ஹோமங்கள், கலச பூஜையை தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், பாலமுருகன், காளியம்மன், நாகர் , முத்தாலம்மனுக்கும் அதனை தொடர்ந்து ஆலமரத்து முனீஸ்வரருக்கு சங்காபிஷேகம், கவசாபிஷேகம் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நிர்வாகத்தினர் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.