வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான் வைகை பெரியாறு பாசன கால்வாய் கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் 23ம் ஆண்டு உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முதல் நாள் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 2ம் நாள் பக்தர்கள் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து அக்னிசட்டி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. 3ம் நாள் முளைப்பாரியை எடுத்து சென்று ரெங்கசமுத்திரம் ஊருணியில் கரைத்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.