சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 11:06
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உள்ள 2 உண்டியல்கள் நேற்று அறநிலையத்துறை செயல் அலுவலர் மகேந்திர பூபதி, ஆய்வாளர் சுகன்யா தலைமையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள் பக்தர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். அதில் மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 926 ரூபாய் காணிக்கையாக இருந்தது. இதை தொடர்ந்து மீண்டும் உண்டியல்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.