பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி பூஜை முன்னிட்டு கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் மற்றும் மங்கள திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ குருஜி அஷ்டோத்திரம் நடந்தது. எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி 12 மணி நேரம் நாம கீர்த்தனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.