கமுதி: கமுதி சின்னம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா முன்னிட்டு கடந்த ஜூன் 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்பு சின்னம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.