நம்மில் பலரும் மனம் போன போக்கில் செல்வார்கள். கேட்டால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இதுதான் வழி என்று சொல்வர். இப்படி நீங்கள் இருந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம்! இவர்களால் சாதனை படைக்க முடியாது. யார் ஒருவர் தன் மனதை கட்டுப்படுத்துகிறாரோ, அவர்தான் உலகையும் கட்டுப்படுத்துவார். இதற்கு முதலில் உண்மையை பேசுங்கள். கோபப்படாமல் இருங்கள். இதன் மூலம் மனம் அமைதியாகும். அப்போது நீங்கள் நினைப்பதை நடத்தி முடிக்கலாம்.