தாத்தாவும் பேரனும் சாலையில் நடக்கும் போது ஆமை ஒன்றை பார்த்தனர். அவர்கள் காலடி ஓசை கேட்டவுடன் அது தலையை ஓட்டிற்குள் இழுத்துக் கொண்டது. குச்சியால் அடித்து பார்த்தும் அது வெளியே தலைகாட்ட வில்லை. அதை வீட்டிற்கு எடுத்து வந்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை மிதக்க விடு என்றார் தாத்தா. அதன்படியே பேரனும் செய்தான். ‘‘இப்போ ஆமை தலையை நீட்டுதா பார்த்தாயா ஏன்’’ என கேட்டார் தாத்தா. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அன்பு காட்டினாலே போதும் என சொன்னான் பேரன். அவனின் வார்த்தையை கேட்டு கட்டிக் அணைத்தார் தாத்தா.