Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜகன்னாதர் ரத யாத்திரை ... கோவிந்தவாடி குரு கோவில் உண்டியல் வருவாய் ரூ.8 லட்சம் கோவிந்தவாடி குரு கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
12:06

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனிசுவாதி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு, கோயில் யானை முன் செல்ல கொடி பட்டம் மாடவீதிகள் சுற்றி வந்து வடபத்திரசயனர் சன்னதியில் உள்ள பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து ரகு பட்டர் கொடிப்பட்டம் ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, அரையர் பாலமுகுந்தன், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் பட்டர்கள் பங்கேற்றனர். ஜூன் 30 வரை நடக்கும் 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. ஜூன் 28 அன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar