ஆனி செவ்வாய்: காளியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2023 01:06
கோவை ; சாய்பாபா காலனி கே. கே. புதூர் 9-ம் நெம்பர் வீதி காளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் காளியம்மன் கோவிலில் ஆனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.