பதிவு செய்த நாள்
25
ஜூன்
2023
11:06
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
சில நுாறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடக்காமல் தாமதமானது. இதனால் போதிய பராமரிப்பின்றி கோயில் கோபுரங்கள் சிதலமடைந்து காணப்பட்டன. உள்ளூர் பிரமுகர்களின் நீண்ட கால தொடர் முயற்சிக்கு பின்னர் இககோயில் திருப்பணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அனுமதி தந்தது. 2021ல் பாலாலய பூஜையுடன் துவங்கிய திருப்பணி நிறைவுற்று ஜூன் 15ல் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. ஜூன் 21 துவங்கி நேற்று காலை வரை யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், கரூர் எம்.பி., ஜோதிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஒன்றிய தலைவர் தனலட்சுமி, பேரூராட்சி தலைவர் நிருபாராணி, அறநிலையத்துறை மண்டல இணை ஆனையர் பாரதி, ஸ்தபதி ஜெயராமன், செயல் அலுவலர் முருகன், வடமதுரை ஒன்றிய தி.மு.க., செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பொருளாளர் முரளிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன் உள்பட ஆயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்.