காளஹஸ்தி கைலாசகிரி மலை காலபைரவ சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2023 01:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள கைலாசகிரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவ சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு, அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, கோயிலை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டார். ஸ்ரீகாளஹஸ்தி காலபைரவ சுவாமி மற்றும் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி கோயில்களுக்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு கோவில்கள் சீரமைக்கப்படுத்தப்பட்டன. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் சுவாமிநாதன் குருக்கள் தலைமையில், வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபன பூஜை செய்யப்பட்டு ஹோம பூஜை நடத்தினர். அதன்பின்(மூல) கலச நீர் எடுத்து வரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, கோவில் (உச்சி) கலசத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு பிரதட்சண கலச நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. (சுவாமி )மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீப தூபங்கள் சமர்பிக்கப்பட்டடு பூர்ணா ஆரத்தி செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராஜ கோபுரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி சமேத வீரபத்ர சுவாமி கோயில் கும்பாபிஷேகமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கோவில் (உச்சி) கலசத்திற்கும் சுவாமி அம்மையாருக்கு கலச நீரால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக பூஜைகளில் கலந்து கொண்ட சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு பேசுகையில் சிவன் கோயில் துணை கோயில்களான அனைத்து கோயில்களுக்கும் பிரமாண்ட கும்பாபிஷேகம் நடத்தி பழைய பெருமையை மீட்டெடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என்றும் துணை கோவில்கள் ஆன்மீக சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்படும் என்றார்.