பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
03:06
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
தமிழக ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில், பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோவிலில், புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. முன்னதாகவே மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. புத்தக நிலையத்தில் பன்னிரு ஆழ்வார்கள், பாண்டிய நாட்டு வைணவ கோவில்கள், தமிழ்நாட்டு கோவில் கட்டடக்கலை, ஆகமங்கள் மாற்றம், நீதி போதனை புத்தகங்கள், ஸ்தல வரலாறு, ஸ்தல புராணம், தமிழ் கலைகள், இசையும், யாழும், தமிழக கோயில் கலை வரலாறு, வைணவ சித்தாந்த ஞான உரை, பெரிய புராண கதைகள், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், சைவ சமய சிறப்பு நூல்கள், நால்வர் நான்மணி, ராமாயணம், மகாபாரதம், நான்கு வேதங்கள், ஆகம விதிகள் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் புத்தக விற்பனையை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்கள், மிராசுதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.