பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கி நடக்கிறது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் ஜூன் 24 அன்று காலை தொடங்கி அணுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை அடைந்தன. நேற்று காலை சந்திரசேகர சுவாமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு முதல் காலையாக பூஜைகள் துவங்கிய இரவு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஜூன் 28 காலை 6 ம் கால யாக பூஜைகள் நிறைவடைந்து காலை 6:00 மணி முதல் 7:15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், கும்பாபிஷேக விழா குழுவினர் செய்துள்ளனர்.