* அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனை போற்றுங்கள். அது யாரை வாழ்த்த வேண்டும் என நினைக்கின்றீர்களோ அது அவர்களை சென்றடையும். * எது தேவையோ அதனை கேட்டு பெறுங்கள். அதுவே திருப்தி தரும். * அநீதிக்கு எதிராக எதிர் வினை செய்யாதீர். அதற்கு தகுந்த பதிலை காலம் அதிரடியாக சொல்லும். * நிம்மதி என்பது சிந்தனையில் இருந்து வருவதாகும். * யாராக இருந்தாலும் எதிர்த்து பேசாதீர்கள். * கருத்துான்றி செய்யும் செயல்கள் சிறப்பான இலக்கை அடையும் * தெரிந்து செய்யும் தவறான செயலுக்கு தண்டனை உறதி. * நற்செயல்களை விருப்பத்தோடு செய்யுங்கள் – பொன்மொழிகள்