நீண்ட நாட்களாக மணி ஒன்று மண்ணில் புதைந்து இருந்தது. அதை தோண்டி எடுத்தார் ஒருவர். அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது கணீர் கணீர் என ஒலித்தது. இந்த மணியோசை கேட்காமல் இருக்க என்ன செய்ய என யோசித்தார். தன் காதுகளில் பஞ்சை எடுத்து அடைத்தார். இனி யாருக்கும் இந்த சத்தம் கேட்காது என நினைத்தவாறு வீட்டிற்கு மணியுடன் புறப்பட்டார். பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைத்துக் கொள்ளும். அது போலத்தான் மனிதர்கள் பலர் வாழ்கின்றனர்.