கோணலான மரத்தை பார்த்து ‘‘ மனிதர்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் என்னை போன்றவர்களிடம் இருந்தே பயன்படுத்துகிறார்கள். நீயோ இப்படி இருந்தும் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறாயே’’ என நேரானமரம் சொன்னது. அப்போது கோணலான மரத்தின் நிழலில் ஆடு மாடுகளை ஓய்வெடுக்க விட்டார் ஒருவர். அதை பார்த்த பிறகு நேரான மரம் ஒன்றுமே பேசவில்லை. நீ யாரோ ஒருவருக்கு தான் பயன்படுவாய் என்னை பார்த்தாயா என சொல்லாமல் சொன்னது கோணலான மரம். எல்லோருமே திறமையானவர்கள் தான் என்பதை புரிந்து கொண்டது நேரான மரம்.