காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 04:06
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது.
காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இவ்வாண்டு இன்று 30ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. 1ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருகல்யாணம் நடைபெறுகிறது. மறுநாள் வரும் 2ம் தேதி அதிகாலை 3மணிக்கு ஸ்ரீபிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலாவில் பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. மாலை அமுது படையல் நிகழ்ச்சி மற்றும் இரவு பாண்டிய நாட்டிற்கு சென்ற பரமதத்த செட்டியருக்கு இரண்டாது திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3ம் தேதி அம்மையார் காட்சி கொடுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாங்கனி பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய வீதிகள் பாரதியார்சாலை, கன்னடியார் வீதி. பெருமாள்கோவில் வீதி.திருநள்ளார் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாங்கானி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாக்கும் வகையில் 100 இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது நேற்று முன்தினம் சீனியர் எஸ்.பி. மணீஷ், தலைமையில் எஸ்.பி..சுப்ரமணியன்.கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வெற்றிச் செல்வம்.துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோரிடம் விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் எவ்வித சிரமம் இல்லால் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சீனியர் எஸ்.பி..மணீஷ் கூறுகையில்; மாங்கனி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தோகப்படி உள்ள ஆட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு சுமார் 500க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு இடங்களில் 100 சி.சி.டிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது மேலும் போலீசார் பக்தர்களுடன் கலந்து அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் போது பக்தர்கள் வீட்டில் ஒருவர் இருக்கவேண்டும் விளை உயர்ந்த நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.மேலும் கூட்டநேரிசலை தவிர்க்கவேண்டும் சந்தோகப்படி ஆட்கள் தெரிந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவே பக்தர்கள் பாதுகாப்பாக எவ்வித சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.