பதிவு செய்த நாள்
01
ஜூலை
2023
10:07
தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் இருந்து தசாஷ்வமேத காட் என்ற இடத்தில் கங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சைகத பரமேஸ்வர லிங்கத்திற்கு, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பழங்கால பாரம்பரியப்படி பூஜை செய்து வழிபட்டார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆறு மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டு, காசியில் சாதுர்மாஸ்ய விரத சிறப்பு பூஜை வழிபாடு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக மத்திய பிரதேசம் சென்ற ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 26, 27ம் தேதிகளில், ஜபல்பூர் ஸ்ரீபாலாஜி கோவிலில் தங்கி, சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினார். 28ம் தேதி நிராலா - ரிவா சரஸ்வதி சிஷூ மந்திரில் தங்கி அருளாசி வழங்கினார். தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் சென்ற சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை துவங்கினார். 29 முதல், ஜூலை 5ம் தேதி வரை, பிரயக்ராஜில் தங்கும் சுவாமிகள், பெனிபந்த் ஸ்ரீசங்கர விமான மண்டபத்தில் தங்கி அருளாசி வழங்குகிறார். விழாவில் நேற்று 30 ம் தேதி சைகத லிங்க பரமேஸ்வர பூஜை செய்தார். முன்னதாக, ரேவாவில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் வழியில் பல இடங்களில் ஸ்வாகதம் பெற்று, பிரயாக்ராஜ் வந்தடைந்தார். சித்தேஷ்வர் மஹாதேவ் மந்திர் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சுவாமிகள் திருவேணி சங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் விமான மண்டபத்திற்கு வந்தார். அங்கு தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் இருந்து தசாஷ்வமேத காட் என்ற இடத்தில் கங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சைகத பரமேஸ்வர லிங்கத்தின் பழங்கால பாரம்பரியப்படி பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக, ரேவாவில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் வழியில் பல இடங்களில் ஸ்வாகதம் பெற்று இரவு தாமதமாக பிரயாக்ராஜ் வந்தடைந்தார். சித்தேஷ்வர் மஹாதேவ் மந்திர் வரை அவரது புனிதர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரது புனிதர் பூஜைகள் மற்றும் ஹாரத்திகளை செய்தார். பின்னர், திருவேணி சங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆதி சங்கரர் விமான மண்டபத்திற்கு வந்தார். தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்ட புனித மணல் சிவலிங்கம் வடிவில் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து கங்காவிற்கு பூஜை செய்யப்பட்டு, பின்னர் புனித சைகத பரமேஸ்வர லிங்கம் கங்கையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது சைகதா லிங்க பிரதிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. 1934 ஆம் ஆண்டு காசி யாத்திரையின் போது பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளாலும், 1974 ஆம் ஆண்டு காசி யாத்திரையின் போது பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளாலும் இந்த பூஜைகளை பிரயாகா க்ஷேத்திரத்தில் உள்ள அதே தசாஸ்வமேத காட்டில் தான் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெனிபந்த் ஸ்ரீசங்கர விமான மண்டபத்தில் தங்கி, ஜூலை 3ம் தேதி, வியாச பூஜை நடத்தி, அருளாசி வழங்க உள்ளார். ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, வாரணாசியில் தங்கும் சுவாமிகள், ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் காசி கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்.