திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2023 11:07
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆரவாரத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி- அம்மன் தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
சட்டசபை தலைவர் அப்பாவு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.