பதிவு செய்த நாள்
03
ஜூலை
2023
12:07
சூலூர்: பெரிய குயிலி ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் பிருந்தாவன நாட்டியம் பக்தி பரவசத்துடன் நடந்தது.
சூலூர் அடுத்த பெரிய குயிலியில், கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆஞ்சநேயர் ஸ்தலம் அமைக்கப்பட்டது. இங்கு, 10 அடி உயரம் உள்ள ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த, 29 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, 30 ம்தேதி, 108 பக்தர்கள் சேர்ந்து, 1000 முறை ஸ்ரீ மகா காயத்ரி மந்திரம் பாராயணம் செய்தனர். நேற்று முன் தினம், ஹனுமன் சாலீஸா பாராயணமும், 108 வைணவ தாசர்களின் சங்கு நாதமும் நடந்தது. நேற்று காலை, பிருந்தாவன நாட்டியத்துடன் கீதா பஜன் நடந்தது. உற்சாகமாகவும், பக்தி பரவசத்துடன், சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.