பேரையூர்: பேரையூரில் மொட்டைமலையின் மீது சிவன் கோயிலும் அடிவாரத்தில் மேலப் பரங்கிரி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி கோயிலும், கோயிலின் முன் பகுதியில் சரவணப் பொய்கை என அழைக்கப்படும் குளமும் உள்ளது. இந்தக் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முட்புதர்களாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே சிறு குட்டைகளில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றன. பக்தர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட இந்த குளம் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகள் மற்றும் நாய்கள் புகழிடமாக மாறிவிட்டது.இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோவில். குளம் மட்டும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. பேரூராட்சியினர் இதை ஏனோ கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் பக்தர்கள் வேதனையுடன் உள்ளனர். குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.