கோவை : மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாக சாயி மந்திர் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர்.