அம்மையார் மாங்கனித்திருவிழாவில் முதல்வர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம் மேற்கொண்டார். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி கடந்த 30ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும். 1ம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு இணையாக மாங்கனிகளை இறைந்தனர்.இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு மாங்கனிகள் வழங்கப்பட்டது.இதில் அமைச்சர் சந்திரபிரியங்கா. எம்.எல்.ஏக்கள் திருமுருகன். நாஜிம்,நாகதியாகராஜன். சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.