பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா (குரு பவுர்ணமி பூஜை) கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சாய் அஷ்டோத்திர ஹோமம், ஸ்தவன மஞ்சரி பாராயணம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அறிவையும், ஞானத்தையும், வழங்கிய குருக்களுக்கு நன்றி கூறும் திருநாளான இந்த குரு பூர்ணிமாவில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குருவான ஷீரடி சாய்பாபாவை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.