நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் திருநீற்றின் மகிமைகளை சொல்லி பத்து பாடல்கள் பாடியுள்ளார். அதற்கு திருநீற்றுப்பதிகம் என பெயர். ‘ஒருவர் தினமும் திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதை அது விவரிக்கிறது. உயர்ந்த நற்குணம் தோன்றும் தடையற்ற தெய்வசிந்தனை உண்டாகும் குறைவற்ற செல்வம் கிடைக்கும் வாக்கு பலித்தம் ஏற்படும் முகத்தில் தெய்வீகக் கலை பளிச்சிடும் நல்லவர்கள் விரும்பி வந்து இணைவர் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் பாவங்கள் தீரும் உடல்நாற்றம் போகும் நோய்க்கிருமிகள் சாகும் நோய்கள் ஒழியும் தீட்டுகள் கழியும் சிவபெருமான் திருவடியை காட்டும்.