வேதத்துக்கு முக்கியம் வேள்வி. இதற்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் முருகப்பெருமான் அக்னி வடிவமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாய ஸ்வரூபமான ஈஸ்வரனின் கண்களில் இருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி, வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட்டன. அவர் அங்கே ஷண்முகராகி, பிறகு பூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களில் கோயில் கொண்டிருக்கிறார். இப்படி பஞ்சபூத சம்பந்தம் இருந்தாலும் இவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். இதனால் இவர் ‘அக்னி பூ’ என போற்றப்படுகிறார்.