மனிதனை கீழான நடத்தைகளில் இருந்து அப்புறப்படுத்திடும் ஆற்றல் இறை நம்பிக்கைக்கு உண்டு. இதனால்தான் இறைவன் மனிதர்களை நன்மையின் பக்கமும், நற்குணங்களின் பக்கமும் அழைத்திடும்போது, தன் அடியார்களைத் தீமையில் இருந்து தடுத்திடும்போது இவை நம்பிக்கையின் பகுதிகள் எனப் பிரகடனப்படுத்துகின்றான். மனிதர்களை நேர்வழியில் செல்லுமாறு சொல்கின்றபோதும், உண்மையே பேசுமாறு பணிக்கின்றபோதும் நம்பிக்கை கொண்டவர்களே ஆவர்.