பல போரில் வெற்றி பெற்ற அரசர் ஒருவர் ஒரு நாட்டின் மீது படையெடுத்து சென்றார். எதிர்பாராத விதமாக திரும்பி தன் நாட்டுக்கு செல்லும் சூழல். பொறுப்பை தளபதியிடம் ஒப்படைத்ததோடு, தனது வாளையும் கவசத்தையும் கொடுத்தார். தளபதியும் அவரது ஆலோசனையின்படி செயல்பட்டார். ஆனால் அதையும் தாண்டி புதுப்பிரச்னைகள் அங்கு எழுந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். அப்போது பார்த்து கவச உடையில் இருந்த பேப்பர் ஒன்று அவரது கண்ணில் பட்டது. அதில் புதிய பிரச்னை வந்தால் எப்படி செயல்படுவது என்ற குறிப்பு இருந்தது. அவ்வளவுதான் போர்க்களத்தில் புகுந்து விளையாடி வெற்றி பெற்றார். பார்த்தீர்களா... இதையே எப்போதும் விழிப்புடன் இருப்பது என்கிறோம். வாழ்க்கையில் இதை பின்பற்றினால் எதிர்பாராத சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.