21 ஆண்டுகளுக்கு பின் மாடம்பாக்கம் தேனுபுரீஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 12:07
செங்கல்பட்டு : மாடம்பாக்கம் தேனுபுரீஷ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
மாடம்பாக்கம்,சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பின், இன்று ஜூலை, 5ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஏழு நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. விழாவின் 7ம் நாளான இன்று ஜூலை 5ல் விசேஷ பூஜை, யாகங்கள் முடிந்து காலை 9:45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விழாக் குழுவினர் செய்திருந்தனர்.