சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேட்டையில் உள்ள வெள்ளப்பிள்ளையார், பச்சைவள்ளி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் மலைகாசிராஜன் தலைமையில் நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பச்சைவள்ளி காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். பின்பு கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கருப்பச்சாமி, நாகம்மாள், வராஹி அம்மன் , நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜாரி கிருஷ்ணசாமி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருப்பணிக் குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.