காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 05:07
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள ஆசன மண்டபத்தில் சிறப்பாக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஈடுபட்டதோடு சாமி தரிசனம் செய்தனர். இந் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேசு கோயில் துணை நிர்வாக அதிகாரி ரவீந்திர பாபு மற்றும் அதிகாரிகள் கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி விநாயகர் (உற்சவமூர்த்தியை)பல்லக்கில் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.