வைத்தியநாதசுவாமி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2023 05:07
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று மாலை மஞ்சள், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.