காவேரி செட்டிபட்டி குங்கும காளியம்மன் கோவில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 11:07
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே காவேரி செட்டிபட்டி குங்கும காளியம்மன், வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை விழாவில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி குங்கும காளியம்மனுக்கு பால்,பழம், பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜை யாக கேள்வி பூஜைகளும் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை மேட்டுக்கடை மல்லத்தான் பாறை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கரைகாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.