பதிவு செய்த நாள்
13
ஜூலை
2023
10:07
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டின் துவக்கமாக நாளை கன்னிகாபரமேஸ்வரி பூஜை நடக்கிறது.
வழிபாடு குறித்து பீடத்தின் சிவசண்முக பாபு சாமி கூறியதாவது: ஆடி மாதத்திற்கு முன் வரும் வெள்ளி, முதலாவது வெள்ளியாக கணக்கிடப்பட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். முதல் வாரம் கன்னி பெண்களை. தெய்வமாக வழிபடும் கன்னிகாபரமேஸ்வரி பூஜை நடக்கும். இரண்டாம் வாரம் திருமாங்கல்ய பூஜை, சிவன் - பார்வதி திருக்கல்யாணமும், மூன்றாம் வாரம் புத்திர பாக்கியத்திற்காக, புத்திர சவுபாக்கிய பூஜையும் நடக்கும். நான்காம் வாரம் குழந்தைகட்கு கல்வி, தொழில் விருத்திக்கான பூஜையும், ஐந்தாம் வாரம் ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கான குபேர பூஜையும் நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார். இப்பீடத்தில், 108 சுமங்கலி பூஜை நடப்பதுடன். வளையல், மஞ்சள் கயிறு, குங்கும சிமிழ், மாங்கல்ய பிரசாதம் வழங்கப்படும். அம்மனுக்கு கம்பங்கூழ் வைத்து பூஜை செய்யப்படும். ஏற்பாடுகளை மகளிர் அணி சரஸ்வதி, பாக்யலட்சுமி, உமாமகேஸ்வரி உள்ளிட்டோர செய்துள்ளனர்.