ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2023 11:07
திருச்சி: பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபயக்கோயிலான பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையுடன் கூடிய ஆண்டாள் சன்னதியில் ஆடிப்பூரம் உற்சவம் தொடங்கியது.
தினமும் சன்னிதியில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி முதலியன அத்யாபகர்களால் (திவ்வியப்ரபந்த கோஷ்டி) பாராயணம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் இஷ்ட தெய்வமான கண்ணபிரானின் பால லீலைகளை உணர்த்தும் விதமாக ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று வேணுகோபாலன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.