தளவாய்புரம்: சேத்துார் ஆதி புத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயில் இரண்டு நாள் ஆனி திருவிழா முப்பழ அபிஷேக பூஜை நடந்தது.
சேத்துார் மேற்கு ஆதிபுத்திரன் கொண்ட அய்யனார் சுவாமி வீரமாகாளியம்மன், மாயாண்டி, கருப்பசாமி, இருளப்பசாமி, மகாலட்சுமி உள்பட பல்வேறு பரிவார தெய்வங்களோடு அமைந்துள்ளார். இந்த ஆண்டு ஆனி திருவிழா நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை மூலவர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடந்தது. கோயில் முன் பொங்கல் வைத்து முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். மாலையில் விளையாட்டு போட்டிகள் இரவு 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சி தொடங்கி 12:00 மணிக்கு முப்பழ அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆதி புத்திரங் கொண்ட அய்யனார் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.