பதிவு செய்த நாள்
17
ஜூலை
2023
01:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி 5ல் (ஜூலை 21) ஆடிப்பூரம், ஆடி 16ல் (ஆக.1) பவுர்ணமி, ஆடி 24ல் (ஆக. 9) கார்த்திகை, ஆடி 26ல் (ஆக. 11) 1008 விளக்கு பூஜை நடக்கிறது.
சித்தி விநாயகர் கோயிலில் ஆடி2, ஆடி 30ல் கூழ் காய்ச்சி ஊற்றுதல், ஆடி 5ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடக்கிறது. திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (ஆடி1) ஆண்டாள் ஏகாந்த சேவை, ஆடி 5ல் ரங்க மன்னார் பெருமாள் சயன சேவை, ஆடி 6ல் ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம், ஆடி 18ல் கருப்பசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது.
திருப்பரங்குன்றம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆடி 6ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் ஆடி அனைத்து வெள்ளி கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பக்தர்களுக்கு கூழ் உற்றப்படுகிறது. முதல் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடக்கிறது. திருநகர் அய்யனார் அச்சமுத்தமன் கோயிலில் ஆடி 5ல் காப்பு கட்டுதல், ஆடி 12ல் அக்னி சட்டி எடுத்தல், ஆடி 19ல் பால்குட உற்ஸவம், ஆடி 26ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு விளக்கு எடுத்தல் விழாக்கள் நடக்கிறது.
2 அமாவாசை: இந்த ஆண்டு ஆடி 1 மற்றும் ஆடி 31ல் அமாவாசை வருகிறது.