புஷ்ப பல்லக்கில் வலம் வந்த ஏழுமலையான்: பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்ட கஜானா சாவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 10:07
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையான் புஷ்ப பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார்.
ஆனிவார ஆஸ்தானத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பழைய வரவு-செலவு கணக்கை முடித்து, புதிய வரவு செலவு கணக்கு தொடங்கப்படும். நேற்று திருமலை கோவில் வளாகத்தில் உற்சவர் மலையப்பர் முன்னிலையில், கோவில் வருடாந்திர கணக்கு வழக்குகள் ஒப்பிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் கஜானா சாவி சம்பிரதாய ரீதியாக ஏழுமலையான் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று புதிய கணக்கு தொடங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.