திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால் பலர் மணமகளை காட்சி பொருளாக மாற்றிவிடுகின்றனர். இல்லறம் ஓர் ஒப்பந்தம் என்பதால் மூன்றாமவரின் (மஹரமானவர்களின்) முன்பாக, மணமக்கள் தமது விருப்பு வெறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பரிமாற வேண்டும். ஒருவர், ‘‘நான் ஒரு பெண்ணை மணக்க விரும்புகிறேன்’’ என்று நபிகள் நாயகத்திடம் கூறினார். அதற்கு அவர், ‘‘நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?’’ எனக்கேட்டார். அவர், ‘‘இல்லை’’ என்றார். ‘‘அப்பெண்ணைப் பார்த்தால்தான் உங்களுக்கு இடையில் நட்பு, இணக்கம், அன்பு மலரும்’’ என சொன்னார்.