இந்த உலகம் கடவுளின் ஐந்தொழில் மூலம் இயங்குகிறது. வைணவக்கடவுளாகிய மகாவிஷ்ணு ஐந்து தொழில்களை அவர் வைத்திருக்கும் ஆயுதங்களை கொண்டு சிறப்பாக செய்கிறார் என பாடுகிறார்கள் ஆழ்வார்கள். இதனால் அவருக்கு பஞ்சாயுதன் என பெயர் வந்தது. பாஞ்சசைன்யமாகிய சங்கினால் படைத்தலையும், சுதர்சனமாகிய சக்கரத்தினால் காத்தலையும், சாரங்கமாகிய வில்லினால் அழித்தலையும், நந்தகமாகிய வாளினால் மறைத்தலையும், கெளமோதகமாகிய கதையால் அருளல் என்கிற ஐந்தொழில்களையும் செய்கிறார். இவரின் திருநாமங்களில் ஒன்றாகிய ஹரி என்னும் நாமத்தை சொல்பவர்களுக்கு பாவங்கள் போகும் என்கிறது சாஸ்திரம்.