மறுமையில் இறைவனை சந்திக்கும் மனிதனிடம் கீழ்க்கண்டவை கேட்கப்படும்: 1. உணவளிக்கும்படி நான் கேட்டேன். ஆனால் நீ உணவளிக்கவில்லை. 2. நான் நோயுற்றிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்கவில்லை அதற்கு மனிதன் கீழ்கண்டவற்றை கூறுவான்: எல்லோரையும் பராமரிப்பவன் நீ. அப்படி இருக்க நான் எப்படி உனக்கு உணவு கொடுக்க முடியும். நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு இறைவன் கூறுவான்: எனது அடியான் ஒருவன் உன்னிடம் உணவு கேட்டான். நீ தரவில்லை. மற்றொருவன் நோயால் அவதிப்பட்டான். அவனை பார்க்க நீ செல்லவில்லை. இவர்களுக்கு உதவியிருந்தால் என்னை அடைந்திருப்பாய் எனக் கூறுவான். பார்த்தீர்களா... எல்லோருக்கும் உதவினால் மறுமையில் பலன் கொடுக்கும்.