காசி, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய தலங்களில் உள்ள அம்மனின் பெயர்கள் கண்களின் அடிப்படையில் உள்ளன. * காசி விசாலாட்சி – அகன்ற கண்களை கொண்டவள் * காஞ்சி காமாட்சி – விரும்பியதை தரும் கண்களை கொண்டவள் * மதுரை மீனாட்சி – மீன் போன்ற கண்களை கொண்டவள் * திருவாரூர் கமலாயதாட்சி – தாமரை போன்ற கண்களை கொண்டவள் * நாகப்பட்டினம் நீலாயதாட்சி – நீலநிறக் கண்களை கொண்டவள்