உணவை செரிக்கச் செய்யும் சக்தி வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலையுடன் சேரும் சுண்ணாம்பு கால்சியம் சத்தை உடலுக்குத் தரும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது உணவுக்குப் பின்னர் வெற்றிலை, பாக்கு கொடுப்பர். சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும் போதும் வெற்றிலை வைத்து அழைப்பதுண்டு. இதன் நுனியில் மகாலட்சுமி, நடுவில் சரஸ்வதி, காம்பில் பார்வதி என மூன்று தேவியரும் இதில் உள்ளனர். சுவாமிக்கு நைவேத்யமாக எத்தனை பொருட்களை வைத்தாலும் வெற்றிலையும் பாக்கும் இல்லாவிட்டால் அது முழுமை பெறுவதில்லை.