அவிநாசி பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு; வெற்றி பெற தேங்காய் உடைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2023 03:07
திருப்பூர்: ஹிந்து முன்னணி சார்பில் நடக்க உள்ள அவிநாசி பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு வெற்றி பெறவும், கோரிக்கை நிறைவேற வேண்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.
கோவில்களை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணியின் பாதுகாப்பு மாநாடு 30ம் தேதி நடக்கிறது. கொங்கேழு சிவாலயங்களில், முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், நுழைந்த வாலிபர், சிலைகளை சேதப்படுத்தினர். இதுபோன்று பிரசித்தி பெற்ற கோவிலின் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஹிந்து முன்னணி சார்பில், அவிநாசி பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு வரும் 30ம் தேதி மாலை அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கைகாட்டிப்புதுாரில் நடக்கிறது. நடக்க உள்ள அவிநாசி பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு வெற்றி பெறவும், கோரிக்கை நிறைவேற வேண்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.