கோயில் அதிகாரியை மாற்றக்கோரி ராமேஸ்வரத்தில் கடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 04:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையரை மாற்ற கோரி வியாபாரிகள் கடையடைப்பு, மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு வழியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல், கோயில் இணை ஆணையர் மாரியப்பன் ரூ.100, 200 கட்டணம் எடுக்க சொல்லி வலியுறுத்தினர். மேலும் கோயிலில் பக்தர்கள் உரிமை, பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆகம மரபுகளை பின்பற்றாமல் தொடர்ந்து விதி மீறும் இணை ஆணையரை மாற்றக் கோரி ராமேஸ்வரம் மக்கள் நல பேரவையினர் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று கோயில் ரதவீதி, பஸ் ஸ்டாண்ட், திட்டக்குடி தெரு, மார்க்கெட், தனுஷ்கோடி உள்ளிட்ட நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வணிக கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து ஆதரவு தெரிவித்தனர். ஓட்டல்கள் மூடியதால் வெளியூர் பக்தர்கள் சாப்பிட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இவர்களுக்கு யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கினர். இந்த வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.