செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ; பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 05:07
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 47ம் ஆண்டு பூச்சொரிதல் விழா முன்னிட்டு கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. வருஷாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று முதுகுளத்தூர் முருகன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் , வழிவிடு முருகன் கோயில், வடக்கூர் வழியாக செல்லி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூக்குழி இறங்கும் இடத்தில் தச்சு செய்யப்பட்டது. மாலை சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில் செல்லிஅம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.