Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் செந்துறை அருகே 21ஆண்டுகளுக்கு ... அம்மனுக்கு.. வேப்பிலையை போட்டு சமைத்த கறி கசக்காது; பழமை மாறாத படையல் அம்மனுக்கு.. வேப்பிலையை போட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
10:08

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி நேற்று மாலை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 21ம் தேதி காலையில் கோமதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடக்கிறது. தினமும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப் படி விழாவும் நடந்தது. ஜூலை 29ல் தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நேற்று மாலையில் தெற்குரதவீதியில் நடந்தது. தபசு கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு, சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி தரும் தபசு காட்சி நடந்தது. தொடர்ந்து அம்மன், சுவாமியை வலம் வந்தார். இரவில் சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் காட்சி தரும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar