திருப்பதியில் நேற்று மட்டும் 69733 பேர் தரிசனம்; வருமானம் எவ்வளவு தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2023 10:08
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் முடி காணிக்கை, உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.4.37 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 69733 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 15 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தர்ம தரிசனத்திற்கு, 15மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.