அரகண்டநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாக்கை வார்த்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2023 03:08
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் சாக்கை வார்த்தலை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அரகண்டநல்லூர், கொட்டாமேடு, தென்பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் புத்துமாரியம்மன் கோவில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இக்கோவிலின் ஆண்டு பெருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து மணிலா மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இருக்கும் முத்து மாரியம்மனுக்கு படையலிட்டனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் புத்துமாரியம்மனுக்கு கூழ் படையலிடப்பட்டு மகா திபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.