Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ... ஆடி கடைசி வெள்ளி; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளி; மடப்புரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை; சிறப்பு அலங்கார தரிசனம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை; சிறப்பு அலங்கார தரிசனம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
05:08

மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவில், குறிஞ்சி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின் மதியம் உச்சி கால பூஜை நடந்தது. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு முதலில் பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி குறிஞ்சி நகரில், குறிஞ்சிஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குறிஞ்சிநாயகி அம்மன் சன்னதி உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, இன்று காலையில் நவசக்தி ஹோமம் நடந்தது. அதில் வைத்த தீர்த்தத்தையும், பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி பழனிசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* பெள்ளாதி ஊராட்சி, குரும்பபாளையத்தில், 150 ஆண்டுகள் பழமையான பெள்ளாதி அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar